பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

87


அதன் பிறகு, அதிகமான கீறல்கள் குச்சியில் விழத் தொடங்கியதும், பத்து என்ற நிலையை மாற்றி, இருபதுக்கு ஒரு அழுத்தமான கீறல் என்று குறித்தனர். அதனால்தான் ஸ்கோர் என்றால் இருபது என்று எண்ணிக்கையை, இன்று உலக வழக்காற்றில் குறித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதன் பிறகு, இவ்வாறு குச்சியில் கத்தி வைத்து கீறி ஓட்டங்களைக் கணக்கிடும் பணியில் இருவர் ஈடுபட்டனர். இதனை, 1706 ம் ஆண்டு, வில்லியம் கோல்டுவின் என்பவர் தனது கவிதையில் மிக அழகாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாணயமாக, ஓட்டங்களின் எண்ணிக்கையை மாற்றி மறைக்காமல் குறிக்கின்றார் என்பதைத்தான் நம்பிக்கையான நண்பர்கள் என்று குறிப்பிட்டார். அதுவுமின்றி, அவர்கள் பார்வையாளர்கள் பத்திரிக்கையாளர்கள் பார்வையிலே தான் இதனை செய்ய வேண்டியிருந்ததும் ஒரு காரணம் என்பதால், இவ்வாறு அழகாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறு வளர்ந்து கொண்டே வந்த ஆட்ட செழுமையினைப் பின்பற்றி, ஆட்டத்தில் ஓட்டங்களைக் குறிக்கும் அமைப்பும் மாறிக்கொண்டே வந்தது. ஓட்டங்களை முறையாகக் குறித்தெடுத்தது, வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற ஆண்டு 1744 ஆகும். இந்த குறிப்பையும், 1744ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ந் தேதி, ஆர்டிலரி மைதானத்தில், கென்ட் மாகாணக் குழுவிற்கும், அகில இங்கிலாந்துக் குழுவிற்கும் இடையே நடந்த போட்டியில் எடுத்த ஓட்டங்களையே, முதன் முதலாகக் குறிக்கப்பெற்றவை என்று வரலாறு கூறுகிறது.

ஆனால், அந்த ஓட்டங்களைக் குறிப்பெடுத்தவர், விலாசம் தெரியாத ஒரு பத்திரிக்கையாளர் என்னும் வரலாறு தொடர்ந்து குறித்திருக்கிறது. அதை அடுத்து, 1772ம் ஆண்டு, முதன் முதலாக, பத்திரிக்கையில் போட்டி ஆட்டத்தின் ஓட்டங்கள் பற்றி விவரம் W. எப்ஸ் என்பவரால் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

இதற்கிடையிலே, பிரேட் (Pratt) என்பவர். அச்சிட்ட (காகிதத்தில்) அட்டையில் ஓட்டங்களைக் குறிப்பிட்டு