பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

89


பலகைகள் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1848ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் பொருத்தப்பட்டது.

பேகட் (Paget) என்பவள் ஆட்ட நேரத்தில் அவ்வப்போது. எடுக்கப்படுகின்ற ஓட்டங்கள், இரண்டு பந்தடி ஆட்டக்காரர்கள் எடுத்திருக்கின்ற, ஒட்டங்களைத் தனித்தனியே காட்டுகின்ற வகையில், புதிய முறையில் ஆட்டக் குறிப்புப் பலகையை 1884ம் ஆண்டு அமைத்தார்.

அதன்பின், பந்தெறிபவர்களின் எறியும் எண்ணிக்கையைக் கணக்கிடும் தன்மையில், பலகையில் குறிக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு உதவுகின்ற பாங்கிலே பொருத்தப்பட்டது.

1884ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் தைானத்தில், எல்லாவற்றையும் குறிக்கின்ற விரிவான அளவில் மிகப்பெரிய ஆட்டக்குறிப்புப் பலகை மின் உதவியால் இயங்கிடும் வண்ணம்அமைக்கப்பட்டு, உலகச் சிறப்பினைப் பெற்றது.

இதற்கு முன், பார்வையாளர்கள் யார் யார் எவ்வளவு ஓட்டங்கள் எடுத்திருக்கின்றார்கள் என்பதை அறியாமல், தங்களுக்குள்ளே 'கன்னாபின்னா' வென்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு குழுக்களும் சம அளவில் ஓட்டங்கள் எடுத்திருக்கும் பொழுது மட்டுமே, இரண்டு ஒட்டக் குறிப்பாளர்களும் (Scorers) எழுந்து நிற்பார்களாம். அப்படி நின்றால், இரண்டு குழுக்களும் சமமான ஓட்டங்கள் எடுத்திருக்கின்றன என்பது பொருளாகும்.

அந்த நிலையை அடியோடு மாற்றி, ஆட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவ்வப்போது பின்னென்ன நிலையில் ஓட்டங்களின் எண்ணிக்கை இருக்கின்றன பின்பதை அறிந்து கொள்ள வழி வகுத்துத்தந்தது. இப்படி அமைக்க்ட் ஆட்டக் குறிப்புப் பலகைகள்.