பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


தாக (Out of his ground) கருதப்படுவார். எதிர்க் குழுவினர் அந்த நேரத்தில் பந்தால் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் அவர் ஆட்டமிழந்து விடுவார். அதனால்தான், அதை 'அடித்தாடும் எல்லைக் கோடு' என்று அழைக்கின்றனர்.

இந்தக் கோடு, பந்தாடும் பகுதியில், பந்தெறி எல்லைக் கோட்டுக்கு இணையாக, {Parrallel) குறிக் கம்புகளுக்கு முன்புறத்தில், 4 அடி தூரத்தில் (1.22 மீட்டர்); குறிக்கம்புகளிலிருந்து இருபுறமும் 6 அடி தூரம் (தரையில்) இருப்பது போல கோட்டின் எல்லை குறிக்கப்பட்டிருக்கும்.

16. ஆட்டத்தைத் தொடங்க, நாணயம் சுண்டுவதில் உள்ள முறை யாது? இரு குழுத் தலைவர்களும், இந்த நாணயம் சுண்டும் வாய்ப்பில் (Toss) பங்கு பெறுவார்கள். அவர்கள் ஆட்டம் தொடங்கக் குறித்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக, விளையாட்டு மைதானத்திற்குள் சென்று, நாணயம் சுண்டிவிட்டு, ஆடும் வாய்ப்பினைப்பற்றி முடிவு கூறுவார்கள்.

நாணயம் கண்டும் செயலுக்கு முன்னதாகவே ஆட்டக்காரர்களின் பெயர்களை இருவரும் கொடுத்து விடவேண்டும். பிறகு பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றாலும் முடியாது. எதிர்க்குழுத் தலைவர் இணங்கினால் தான் மாற்றிக் கொள்ள முடியும்.