பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


17. ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு?

11 ஆட்டக்காரர்கள். எந்தத் தருணத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் ஒரு குழு 11 ஆட்டக்காரர்களுக்கு மேல் அமையவும் கூடாது தடுத்தாடவும் (Field) கூடாது.

18. மாற்றாட்டக்காரர்கள் எத்தனை பேர் ஒரு குழுவிற்கு இருக்கலாம்?

எத்தனை பேர் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த விதிகளிலும் கூறப்படவில்லை. அது அந்தந்தப் போட்டி நடத்தும் நிர்வாகக் குழுவின் முடிவுக்கே விடப்பட்டிருக்கிறது. ஆனால் மாற்றாட்டக்காரர்களாக ஆட வருபவர்களுக்கென்று, ஒரு சில விதிமுறைகள் மட்டும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

19. மாற்றாட்டக்காரர்களுக்குரிய (Substitutes) விதி முறைகள் என்ன?

நிரந்தர ஆட்டக்காரர் (Regular player) ஒருவருக்கு ஆடும் நேரத்தில் உடல் சுகவீனமுற்றாலோ அல்லது காயமடைந்துவிட்டாலோ, அவருக்குப் பதிலாக, எதிர்க் குழுத் தலைவனின் சம்மதத்தின் பேரில், ஒரு மாற்றாட்டக்காரர் ஆடுகளத்தில் இறங்கி ஆட அனுமதியுண்டு.

அவ்வாறு ஆட வருபவர், பந்தைத் தடுத்தாடலாம் (Field) அல்லது காயமுற்ற ஆட்டக்காரர் அடித்தாடும்போது, இவர் விக்கெட்டுகளுக் கிடையில் ஓடி ஓட்டம் (Run) எடுக்கலாம்.

ஆனால் அவர் பந்தை அடித்தாடவோ (Bat) அல்லது பந்தை எறிந்தாடவோ (Bowl) முடியாது.

கிரிக்-2