பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

 எதிர்க்குழுத் தலைவன் ஏற்றுக் கொண்டாலொழிய, ஆட்டக்காரர்களை பிறகு மாற்றிக்கொள்ள முடியாது. ஆகவே பெயர்ப் பட்டியல் தருவதற்குமுன், ஆழ்ந்து சிந்தித்தே முடிவுக்கு வரவேண்டும்.

முதலில் யார் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்காக, ஆடுகின்ற மைதானத்திற்குள் சென்று, நாணயத்தைச் சுண்டி, எறிவதன் மூலம், இரு குழுத் தலைவர்களும் முடிவெடுக்க வேண்டும்.

அதாவது, எப்பொழுது ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று முன்னரே அவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கும் ஆட்டத்தொடக்க நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே, இரு குழுத்தலைவர்களும் மைதானத்தில், நாணயம் சுண்டுவதன் மூலம் முடிவு காணவேண்டும்.

நாணயம் சுண்டுவதில் (Toss) வெற்றி பெற்றக் குழுத்தலைவர், பந்தெறிந்தாடுவதா (Bowl) அல்லது அடித்தாடுவதா (Bat) என்ற முடிவினை எடுத்து, எதிர்க் குழுத் தலைவருக்குக் கூறிவிட வேண்டும். கூறிய முடிவை, பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளவே கூடாது.

ஆட்ட நேரத்தைக் காட்டுவதற்காக, எந்தக் கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குழுத் தலைவர்கள் இருவரும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்ட மிழந்து வெளியே போகின்ற ஒரு பந்தடி ஆட்டக்காரருக்குப் பதிலாக, உள்ளே ஆடச் செல்லும் அடுத்த ஆட்டக்காரர் 2 நிமிடங்களுக்குள் பந்தாடும் பகுதிக்கு வந்து சேர வேண்டும். அதாவது, வெளியே வருகிற ஆட்டக்காரர் மைதானத்தை விட்டு வந்துவிடுவதற்கு முன், அடுத்த பந்தடி ஆட்டக்காரர் மைதானத்-