பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

 குழு பந்தடி ஆட்டக்காரரை நோக்கி (விக்கெட்டை நோக்கி) பந்தை எறிவதற்குப் பந்தெறி என்று பெயர். (Bowling)

இவ்வாறு 6 முறை தொடர்ந்தாற்போல் எறிவதை பந்தெறி தவணை (Over) என்று கூறுகின்றனர். முன்னரே பேசிக்கொண்டு முடிவு செய்திருந்தாலொழிய ஒரு பந்தெறி தவணைக்கு 6 வாய்ப்புகள்தான் உண்டு.

ஒரு விக்கெட்டிலிருந்து 6 முறை எறிந்து, பிறகு, அடுத்த விக்கெட் பக்கத்திலிருந்து இன்னொருவர் பந்தெறிய இவ்வாறு ஆட்டம் தொடரும்.

34. இரண்டு விக்கெட் பக்கத்திலிருந்தும், ஒருவரே தொடந்தாற்போல் பந்தெறிய முடியுமா?

அவ்வாறு பந்தெறிய, விதிகள் அனுமதிக்கவில்லை. ஒரு பந்தெறியாளர், தான் விரும்புகின்ற எந்த விக்கெட் பக்கமாக இருந்தேனும் பந்தெறியலாம். ஆனால், அவர் தான் விரும்புகின்ற திசையை (விக்கெட்டை) மாற்ற உடனே விரும்ப முடியாது. அதாவது இவரே மாறி மாறி இரண்டு பக்கமும் இரண்டு பந்தெறி தவணைகளை (Two overs) தொடர்ந்தாற் போல் (Consecutively) எறிந்தாட முடியாது.

35. வேகமாகப் பந்தினை எறிந்திட வேண்டும் (Bowling) என்பதற்காக, ஒருவர் எவ்வளவு தூரத்திலிருந்தேனும் ஓடி வரலாமா?

முடியாது. ஓடிவரும் தூரமானது 20 கெஜங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று அகில உலகக் கிரிக்கெட் கழகம் ஒத்துக்கொண்டு, முடிவெடுத்திருக்கிறது.