பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


ஆனால், 'முறையிலா பந்தெறி' (No ball) என்று, பந்தெறிபவர் பக்கம் உள்ள விக்கெட் பின்புறம் நிற்கும் நடுவர் தான் அறிவிக்க வேண்டும்.

38. பந்தெறிக்கும் (Bowl), வீசிப் பந்தெறிவதற்கும் (Throw) உள்ள வேறுபாடு என்ன?

பந்தெறிபவர், தன் கையிலிருந்து பந்தை எறிந்து வெளிவிடுவதற்கு முன், தனது எறியும் கையை, ஒரு சிறிதோ அல்லது முழுவதுமாகவோ, விறைப்பாக இருத்திக்கொண்டு செயல்பட்டால், அது வீசி எறிவதற்கு சமமாகும்.

பந்தை வெளிவிடும் முன் (Act of Delivery) முன்னங் கை மணிக்கட்டுப் பகுதி{Wrist) அவ்வாறிருந்தால் அது தவறில்லை.

கையை விறைப்பாக வைத்தவாறு பந்தை எறிகிறார் என்று நடுவர் கருதினால், உடனே அந்த இரு நடுவர்களில் யாராவது ஒருவர் இது 'முறையிலா பந்தெறி' என்றே அறிவித்து விடலாம்.

39. பந்தெறிபவர் ஓடி வந்துஎறியும்போது, தான் விரும்பும் எந்தப் பக்கமாக இருந்தேனும் இருந்து எறியலாமா?

இல்லை. அதற்கென்று ஒரு சிலவிதிமுறைகள் இருக்கின்றன.

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விக்கெட்டின் இடப்புறத்திலிருந்து அவர்பந்தெறிகிறாரா அல்லது சுற்றிவந்து (Round the wicket) பந்து எறிகிறாரா அல்லது எறியப் பயன்படுவது வலது கையா அல்லது இடது கையா என்பனபோன்ற குறிப்பையெல்லாம், அவர் எறியும் பந்தை அடித்தாட-