பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


41. பந்தெறிய ஓடி வரும்போது, அவர் தற்செயலாக மோதி அருகிலுள்ள விக்கெட் வீழ்ந்துவிட்டால் அதுவும் முறையிலா பந்தெறிதானே?

அது முறையிலா பந்தெறியாகாது. தற்செயலாக நிகழ்ந்துவிட்ட தவறாகையால், அந்தப் பந்தெறி வாய்ப்புக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும்.

42. முறையிலா பந்தெறிக்குரிய தண்டனை என்ன?

நடுவர், 'முறையிலா பந்தெறி' என்று குரல் எழுப்பிய உடனே பந்து நிலைப்பந்தாக (Dead ball) மாறிவிடாது. அதன் பிறகு ஆட்டம் தொடரும். எதிர் நிற்கும் பந்தடி ஆட்டக்காரர் அந்தப்பந்தை அடித்தாடலாம். ஓடி 'ஓட்டமும்' எடுக்கலாம். அதில் அவர் எத்தனை 'ஓட்டங்கள்' எடுத்தாலும், அத்தனையும் அவர் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். அவர் ஒரு ஓட்டம் கூட எடுக்கவில்லை அல்லது எடுக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்காக ஒரு ‘ஓட்டம்' தரப்படும்.

43. முறையிலா பந்தெறி மூலமாக விக்கெட் வீழ்ந்துவிட்டால்?

அவரது விக்கெட் விழுந்தாலும், அவர்ஆட்டமிழக்கமாட்டார். (Not out). பந்தடி ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளுக்கிடையே ஓட்டம் எடுக்கும் முயற்சியின்போது விக்கெட் வீழ்த்தப்பட்டால் (Run out), அல்லது தானே பந்தை இருமுறை அடித்தாடிவிட்டால் (Hit Twice), அல்லது பந்தைக் கையால் தொட்டோ அல்லது தள்ளியாடி