பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


எதிராட்டக்காரரை ஆடவிடாதவாறு மறைந்தாடுதல் போன்ற தவறுகளைச் செய்தால்தான். அவர் ஆட்டமிழக்க நேரிடும். இல்லையேல், அவர் ஆட்டமிழக்கும் வாய்ப்பு எதுவும் நேராது.

44. பந்தெறிபவரது விக்கெட் பக்கம் நிற்கும் பந்தடி ஆட்டக்காரர் பந்தெறிவதற்கு முன் அடித்தாடும் எல்லைக்கு வெளியே வந்து கிற்கலாமா?

நடுவரின் சைகைக்குப் பிறகு, பந்தெறிபவர் ஓடிவந்து பந்தெறிகிறார். அந்த நேரத்தில் அவர் தனது அடித்தாடும் எல்லேக்குள்ளே நிற்பதுதான் விதி முறையாகும்.

அம்மாதிரி அவர் நிற்காத சமயத்தில், அல்லது ஓட்டம் எடுக்கும் முயற்சிக்கும் பந்தெறிய ஓடிவந்தவர், அந்த விக்கெட்டைப் பந்தால் தட்டி வீழ்த்திவிட்டால், அல்லது உரிய விதிமுறைகளின்படி அவரை ஆட்டமிழக்கச் செய்யலாம்.

அவ்வாறு விக்கெட்டை வீழ்த்தினால், அந்த எறியை ‘முறையிலா பந்தெறி’ என்று நடுவர் கூற மாட்டார். அல்லது குறி தவறிப் போய், அவர்கள் ஓட்டங்கள் எடுத்துவிட்டாலும், அவை கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். ஆனால், அந்தப் பந்தெறி, பந்தெறி தவணையின் கணக்கில் சேராது.

ஆகவே, அவர் எல்லைக்கு வெளியே வராமலும், வந்தாலும் மிக எச்சரிக்கையுடன் இருந்தும், ஆடவேண்டும்.