பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

செய்து மீண்டும் அடித்தாடி ஆட்டத்தைத் தொடங்க நடுவர் ஆணையிடுவார்.

53. எட்டாத பந்தெறி என்று நடுவர் உரக்கக் கூறியபிறகு அதை அந்த அடித்தாடும் ஆட்டக்காரர் அடித்தாடிவிட்டால், அதற்குப் பிறகு ஆட்டம் தொடருமா?

தொடரும். அவருக்கு எட்டாத தூரத்தில் போகிறது என்று தானே நடுவர் குரல் கொடுத்தார். அதைப் போய் இவர் முயன்று அடித் தாடி விட்டதால் அது ‘எட்டாத பந்தெறி’ இல்லை என்பதாக ஆகிவிடுகிறது. ஆகவே, சரியான பந்தெறி என்றே ஆகி, அதிலிருந்தே ஆட்டம் மேலும் தொடர்கிறது.

54. பந்தெறியாளர் எறிந்த பந்தானது சரியானதாக இருந்தாலும், அடித்தாடும் ஆட்டக்காரர் அடிக்கும் குறிக்குத் தப்பிப் போய் தடுத்தாடுவோர் கைக்கும் கிட்டாமல் போனால் என்ன செய்வார்கள்?

பந்து தன்னைக் கடந்து போனவுடன், அந்த அடித்தாடும் ஓட்டக்காரர். வாய்ப்பு இருந்தால் ஓடி ‘ஓட்டம்’ எடுக்கலாம்.

55. அந்த ஓட்டம் அவர் கணக்கில் சேருமா?

சேராது, அவர் பந்தடி மட்டையில் பந்து பட்டுப் போனால் தான், அப்பொழுது ஓடி ‘ஓட்டம்’ எடுத்திருந்தால் தான் அவர் கணக்கில் ஓட்டங்கள் சேரும். அவர் மட்டையிலோ, அல்லது உடலில்