பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

57. ‘மெய்படு ஓட்டம்’ (Leg Bye) என்பதற்குரிய சைகை ? என்ன?



‘மெய்படு ஓட்டம்’ என்பதைக் குறித்துக் காட்ட தனது முழங்கால் ஒன்றை உயர்த்தி, தனது கையால் தொட்டுக் காட்டுதல் அதற்குரிய சைகை முறையாகும்.

58. ஒரு பந்தடி ஆட்டக்காரர் எவ்வாறு ஆட்டம் இழக்கிறார்? (Out) பந்தெறிபவரால் எறியப்பட்டு வரும் பந்து அல்லது பந்தடி ஆட்டக்காரரின் மட்டை அல்லது அவரது உடலின் ஏதாவது ஒரு பகுதியானது ஊன்றியிருக்கும் ஒரு குறிக்கம்பையோ (Stump) அல்லது மூன்று கம்புகளையோ அல்லது அவற்றின் மேல் வைக்கப்பட்டிருக்கும் இணைப்பான்