பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

(Bail) அல்லது இரண்டு இணைப்பான்களைத் தள்ளி வீழ்த்திவிட்டால் அல்லது தடுத்தாடும் ஆட்டக்காரர்களில் யாராவது ஒருவர் பந்து வைத்திருக்கும் ஒரு கையால் அல்லது இருகைகளால், ஓட்டம் எடுக்கும் சமயத்தில் விக்கெட்டை வீழ்த்திவிட்டாலும் அந்த விக்கெட்டைக் காத்து நின்றாடும் ஆட்டக்காரர் ஆட்டமிழக்கிறார்.

59. பந்தெறியாளர் எறிந்த பந்து பட்டு, இணைப்பான் துள்ளி மேலே சென்று, மீண்டும் அது இருந்த இடத்திலே வந்து தங்கிவிட்டால், அப்பொழுது எடுக்கும் முடிவு என்ன?

இருந்த இடத்திலிருந்து மேலே சென்று, மீண்டும் அதே இடத்தில் வத்து தங்கி விட்டால், அது ‘விழவில்லை’ என்றுதானே அர்த்தம்! இடம் பெயர்ந்தாலும், அது விழவில்லை என்பதால், அந்த ஆட்டக்காரர், ஆட்டமிழக்காமல், மீண்டும் ஆடுவதற்குத் தகுதியுள்ளவராகின்றார்.

60. துள்ளி மேலே சென்ற இணைப்பான், கீழே வரும் போது, உரிய அதனிடத்தில் தங்காமல், குறிக்கம்புகளுக்கிடையே தேங்கி நின்றுவிட்டால் என்ன செய்வது?

அது கீழே விழுந்துவிட்டது என்றேதான் கொள்ளப்படும். அதனால் விக்கெட் விழுந்ததாகக் கருதப்பட்டு, அதற்குரிய ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார் (Out).

அதேபோல், ஒரு இணைப்பான் கீழே விழுந்தாலும் சரி, ஒரு குறிக்கம்போ அல்லது மூன்று குறிக்கம்புகளோ கீழே விழுந்தாலும் சரி, அந்த விக்கெட் வீழ்ந்தது என்றே குறிக்கப்படும்.