பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

3. பந்தைக் கையால் தொட்டாடுதல் (Handled the Ball)

4. பந்தை இருமுறை அடித்தாடுதல் (Hit the ball Twice) தானே விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல் (Hit wicket)

6. விக்கெட்டின் முன்னே கால் வைத்திருத்தல் (L B. W.)

7. தடுத்தாடுவோரைத் தடை செய்தல் (Obstructing the field)

8. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run out).

9. விக்கெட் வீழ்த்தப்படுதல். (Stumped)

மேலே கூறப்பட்டிருக்கும் ஒன்பது காரணங்களால், ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டத்திலிருந்து ஆட்டமிழந்து வெளியேறுகின்ற வாய்ப்பு இருக்கின்றது.

64. ‘பந்தாடும் எல்லைக்கு வெளியே’ (Out of his Ground) என்றால் என்ன என்பதை விவரி

ஒரு பந்தடி ஆட்டக்காரர், தனது உடலின் பகுதியாவது அல்லது தன் கையில் பிடித்திருக்கும் மட்டையின் ஒரு பகுதியாவது, பந்தாடும் எல்லைக் கோட்டுக்கு (Popping crease) உள்ளே இருக்காமல், வெளியே இருந்தால், அவர் தனது பந்தாடும் எல்லைக்கு வெளியே இருப்பதாகக் கருதப்படுவார்.

அவ்வாறு அவர் நிற்கும்போது, அவரது விக்கெட்டு விதிமுறைக்கேற்ப வீழ்த்தப்பட்டால் அவர் ஆட்டமிழக்கிறார். ஆகவே, அவர் எந்தக் காரணத்தை முன்னிட்டும், பந்து ஆட்டத்தி-