பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


அடித்தாடக்கூடாது என்ற வரைமுறையுடன் விளையாட வேண்டும்.

73. தடுத்தாடுவோரைத் தடை செய்வது என்பது (Obstructing The Field) எவ்வாறு என்று விளக்கிக் கூறுக?

தான் அடித்தாடிய பந்தை, தடுத்தாடும் குழுவினர் தடுக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சிக்கும் போது, வேண்டுமென்றே அவரது முயற்சியைத் தடுத்தாலும் அல்லது கெடுத்தாலும், அதை இரண்டு பந்தடி ஆட்டக்காரர்களில் யார் செய்தாலும், அவர் ஆட்டமிழக்கின்ற தவறைச் செய்தார் என்று கருதப்பட்டு, ஆட்டமிழக்கின்றார். இந்த முடிவை நடுவரேதான் தீர்மானித்து எடுக்கின்றார்.

வேண்டுமென்றே இந்தத் தவறு இழைக்கப்பட்டதா இல்லையா என்பது நடுவரின் முடிவுக்கே விடப்பட்டுவிடுகிறது.

ஆனால், ஓட்டம் எடுக்கும் முயற்சியில் எதிர்பாராதவிதமாக மோதியோ அல்லது தடை செய்யக் காரணமாக இருந்தால் அது தவறல்ல என்றே கருதி ஏற்றுக்கொள்ளப்படும்.

74. இதன்மூலம் ஆட்டமிழக்கின்ற ஆட்டக்காரர் எவ்வாறு குறிப்பேட்டில் குறிக்கப்படுகின்றார்?

'தடுத்தாடுவோரை தடைசெய்தார்' என்றே குறிப்பேட்டில் குறிக்கப்படுகின்றார். இவரை ஆட்டமிழக்கச் செய்ததாக உள்ள பெருமை, அந்தப் பந்தை எறிந்த பந்தெறியாளருக்குக் கிடைக்காது.