பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


டில்பட்டு வீழ்த்தினாலும், அவர் ஆட்டமிழக்க வேண்டிய அவசியமில்லை.

அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது சரி என்றே விதிமுறைகள் கூறுகின்றன.

79. பந்தைக் கையால் தொட்டாடுதல் (Handled the Ball) என்றால் என்ன?

பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் கையானது, மட்டையின் ஒரு பகுதியாகத்தான் கருதப்படுகிறது.

தான் முதன்முறையாக அடித்தாடிய பந்தை, இரண்டாவது முறையாகத் தொடவோ அல்லது அடித்தாடவோ கூடாது என்று நமக்கு நன்கு தெரியும்.

தானே இரண்டாவது முறையாக ஆடுவது போலவே, பந்தைக் கையால் தொட்டாலும் அது குற்றமாகும். அதற்குரிய தண்டனை, ஆட்டமிழந்து வெளியேறுவதுதான்

ஆனால், எதிர்க் குழுவினர் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டால், அவர் பந்தை, அவர்கள் பக்கம் தள்ளி விடலாம்.

பந்தைக் கையால் தொட்டாடிதான் இவர் ஆட்டமிழந்தார் என்றே குறிப்பேட்டில் குறித்து வைக்கப்படும். ஆனால் இவரை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட்டை வீழ்த்தினார் என்ற பெருமை, அந்தப் பந்தை எறிந்த பந்தெறியாளருக்குக் கிடைக்காது.

79. 'விக்கெட் முன்னே கால் வைத்திருத்தல்' (L.B.W) என்பது பற்றி விளக்கிக் கூறுக?

பந்தெறியும் விக்கெட்டிலிருந்து, தான் தடுத்தாடும் விக்கெட்டுக்கு நேராக இருந்து ஆடும்