பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

போது, தனது கையிலோ அல்லது பந்தாடும் மட்டையிலோ முதலில் பந்து படாமல், அந்தப் பந்து, இணைப்பான்களுக்கு (Bails) சற்று மேலான அமைப்பில் வந்தாலும், அதன் வழியில் குறுக்கிட்டு இடையிலே தடுத்தால், ஒரு விக்கெட்டிலிருந்து இன்னொரு விக்கெட்டுக்கு நேர்க்கோட்டு அமைப்பில் (Straight Line) நேராக எறியப்பட்ட அந்தப் பந்து நேராக விக்கெட்டை நோக்கிச் சென்றிருக்கும், அல்லது ஆடுவோரின் வலப் புறத்தில் (offside) விழுந்த பந்தானது அவரது விக்கெட்டை நோக்கி வந்திருக்கும். அதனால் விக்கெட் விழுந்திருக்கும் என்று நடுவர் கருதினால், அபிப்ராயப்பட்டால், விக்கெட்டின் முன்னே கால் வைத்திருந்தார் என்ற குற்றத்திற்கு அந்தப் பந்தடி ஆட்டக்காரர் ஆளாகின்றார்,

80. நடுவர் அந்த முடிவை எவ்வாறு எடுக்கிறார் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

நடுவர் தனது முடிவினை எடுப்பதற்கு முன்னரே கீழே காணும் நான்கு கேள்விகளையும், தனக்குள்ளே கேட்டுக்கொண்டு, அவைகளுக்கு விடைகளையும் பூரணமாகப் புரிந்துகொண்டு, அதன் இறுதியில் ஏற்படும் முடிவினைக் குறித்துத் திருப்தியடைந்த பிறகே, விக்கெட்டின் முன்னே கால் இருந்தது என்று கூறி, தன் முடிவைத் தெரிவிக்கிறார்.

அந்தக் கேள்விகள் வருமாறு :

1. அந்தப் பந்து நேரே சென்று விக்கெட்டை, வீழ்த்தியிருக்க முடியுமா?

2. ஒரு விக்கெட்டுக்கும் இன்னொரு விக்கெட்டுக்கும் நேராகவே அந்தப் பந்து விழுந்ததா (Pitch) அல்லது அவரது வலப்புறத்தில் விழுந்து (off side) விக்கெட்டை நோக்கி வந்ததா?