பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50



இதில் ஒரு சில முறைகளை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

ஓட்டத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்துவிட்டால், எதிரிலுள்ள விக்கெட்டு அவருக்குரியதாகும். அவ்வாறு அவர் நோக்கி ஓடுகின்ற விக்கெட்டானது அவர் அடித்தாடும் எல்லைக் கோட்டைத் தொடுவதற்கு முன் தடுத்தாடுவோரால் வீழ்த்தப்பட்டால், அவர் தான் ஆட்டமிழக்க வேண்டும்.

இருவரும் ஒட்ட முயற்சியில் ஒருவரை ஒருவர் கடக்காத பொழுது, அது அவரவர் விக்கெட் டாகத்தான் இருக்கும். ஆக, விக்கெட்டுக்கு அருகாமையில் எந்த பந்தடி ஆட்டக்காரர் இருக்கிறாரோ அந்த விக்கெட் விழுந்தால், அவர்தான் ஆட்டமிழக்க வேண்டும்.

இவர் தனது பந்தாடும் எல்லைக்கு வெளியே வந்து நின்றுகொண்டிருந்தாலும், இவரது விக்கெட் வீழ்த்தப்பட்டால், அவர் ஆட்டமிழப்பார்.

பந்தெறியின் மூலமாக, விக்கெட் காப்பாளரால் விக்கெட் வீழ்த்தப்பட்டாலொழிய, (83-ம் கேள்வியை காண்க) பந்தை அடித்தாடிய ஆட்டக்காரர், ஒட்டம் எடுக்க முடியாத பொழுதும், முறையிலாபந்தெறி (No Ball) என்று கூறப்பட்டிருக்கும் பொழுதும், அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது.

82. ஒரு பந்தடி ஆட்டக்காரர் அடித்தாடிய பந்தானது, எதிரிலுள்ள விக்கெட்டைப் போய் வீழ்த்திவிடுகிறது. எதிரி .லுள்ள அவரது பாங்கரான மற்றொரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழக்க வேண்டுமா?