பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கெட்டைத் தட்டி வீழ்த்திவிட்டால், அதுதான் விக்கெட்டை அடித்து வீழ்த்துதல் என்பதாகும்.

எல்லையைவிட்டு வெளியே வந்து, விக்கெட்டை இழந்து நிற்கும் அந்த ஆட்டக்காரர், இயற்கையாகவே ஆட்டமிழந்து மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

அடித்தாடுவோர் உடல் அல்லது பந்தாடும் மட்டை இவற்றைத் தொட்டிருக்கும் பந்தைப் பிடித்த விக்கெட் காப்பாளர், விக்கெட்டிற்குமுன் கொண்டு வந்து, விக்கெட்டை வீழ்த்தும் பணியைச் செய்யலாம்.

84. விக்கெட் காப்பாளர் கையில் படாத பந்து, அவர்மீது மோதி திரும்பி வந்து விக்கெட்டை வீழ்த்திவிட்டால், அதை எப்படி தீர்மானிக்க வேண்டும்?

விக்கெட் காப்பாளர் கையில் பந்தைப் பிடித்துத்தான் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதில்லை. காப்பாளரின் காலிலோ, உடலிலோ, அல்லது உடையிலோ பட்டு எதிர்த்துப் போகும் பந்தானது, விக்கெட்டை வீழ்த்தினாலும், அதுவும் சரியானதே. விக்கெட்டுக்குரிய ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விடுவார்.

85. இவ்வாறு ஆடுகின்ற விக்கெட் காப்பாளர், எங்கு நின்று ஆட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இருக்கின்றனவா?

எங்கு நிற்கவேண்டும் என்றே விதிமுறையும், இருக்கிறது.