பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

அந்த அடித்தாடும் ஆட்டக்காரர் அந்தப் பந்தை ஆடி, அவர் தடுப்பதற்குள் ஓட்டம் அல்லது ஓட்டங்கள் எடுத்திருந்தாலுங்கூட, அந்த ஓட்டங்களின் எண்ணிக்கையுடன் தண்டனையாகத் தரப்படும் 5 ஓட்டங்களும் சேர, அது அவரது குறிப்பேட்டில் மொத்தமாகக் குறிக்கப்படும்.

பந்தை அடித்தாடி வேறு எந்த ஓட்டமும் அதில் எடுக்காமல் இருந்தால், இந்த 5 ஓட்டங்கள் மட்டுமே அவர் கணக்கில் குறிக்கப்படும்.

90. அவர் அடித்தாடாமல் போன பந்தை, தடுத்தாடுவோர் தவறான முறையில் தடுத்தால், அப்பொழுது எப்படி குறிக்க முடியும்?

அவர் பந்தை அடித்தாடியிருந்தால் தான், 5 ஓட்டங்கள் அவர் கணக்கில் சேரும். அடித்தாடாத நிலையில், அந்தப் பந்து பொய் ஓட்டம், அல்லது மெய்படு ஓட்டம் (Bye & Leg Bye) அல்லது முறையிலா பந்தெறி (No Ball) அல்லது எட்டாப் பந்தெறி (Wide Ball) என்று என்ன விதமாக அந்தப் பந்து எறியப்பட்டு ஆடப்பட்டிருக்கிறதோ, அதற்கேற்றவாறு அந்தப் பெயரில் குறிக்கப்படும்.

91. ஓட்டங்களைப் பெற்ற பிறகு அடித்தாடும் ஆட்டக்காரர் இருவரும் தாங்கள் நிற்கும் விக்கெட் பகுதிகளை மாற்றிக் கொள்ளலாமா?

மாற்றிக்கொள்ள வேண்டாம். முன் இருந்தது போலவே நின்று ஆட்டத்தைத் தொடரலாம். தடுத்தாடியவர் இழைத்த தவறுக்கு தண்டனை-