பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

யாக 5 ஓட்டங்கள் வந்தனவே தவிர, ஆட்டம் முன் போலவேதான் தொடரும்.

92. ‘ஓட்டங்கள்’ (Runs) எவ்வாறு எடுக்கவேண்டும்?

ஒரு குழு வெற்றி பெறுவதற்கு, இன்னொரு குழுவைவிட அதிகமான ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆட்டத்தின் நோக்கமாகும்.

ஆக, ஒரு ‘ஓட்டம்' எவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.

ஒரு பந்தடி ஆட்டக்காரர், தனது பந்தாடும் மட்டையால் பந்தை அடித்தாடிய நிலை பெறுகிற பொழுதெல்லாம் அல்லது பந்து ஆட்டத்தில் இருக்கிற பொழுதெல்லாம், (In Play), தான் இருக்கின்ற அடித்தாடும் எல்லைக் கோட்டிலிருந்து எதிரே உள்ள அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு ஓடிச் செல்ல, அதேபோல் அங்கே நிற்கும் அடித்தாடும் ஆட்டக்காரர் இங்கே உள்ள அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டால், ‘ஒரு ஓட்டம்’ என்று கணக்கிடப்படும்.

அதாவது, ஒருவர்க்கொருவர் இடம் மாற்றிக் கொள்ள ஓடி வருதல்தான் ‘ஓட்டம்’ என்பதாகும். ஒரு ‘ஓட்டம்’ (Run) எடுக்க இருவரும் அதில் ஓடி பங்குபெற வேண்டும்.

93. இதில் யாருடைய பெயரில் ‘ஓட்டம்’ கணக்கிடப்படும்?