பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


யார் பந்தை அடித்தாடுகிறாரோ, அவர் பெயரில்தான் ஓட்டம் கணக்கிடப்படும்.

அந்த இரண்டு ஆட்டக்காரர்களில் யாராவது ஓருவர் ஆர்வத்தின் அல்லது அவசரத்தின் காரணமாக எதிரே உள்ள எல்லைக் கோட்டைத் தொடாமல், மீண்டும் திரும்பி வந்து, தானிருந்த பகுதியைச் சேர்ந்து, அடுத்து 'ஓட்டம்' எடுக்க முயன்றால், அவர் அந்த எல்லைக் கோட்டைத் தொடாமல் வந்ததால் அதை 'ஓட்டம்' என்று கணக்கிடாமல், 'குறை ஓட்டடம்' (Short run) என்று நடுவர் கூறிவிடுவார். அதற்கு அடுத்த ஓட்டம் சரியாக எடுத்திருந்தால், அந்த 'ஓட்டம்' கணக்கில் சேர்க்கப்படும். அவர் அந்த வாய்ப்பில் எத்தனை ஓட்டங்கள் விதிமுறைகளுக்கேற்ப எடுத்திருந்தாரோ, அதில் ஒரு ஓட்டம் குறையும், அதாவது, அவர்கள் மூன்று ஒட்டங்கள் எடுத்து முடித்திருந்தால், அந்த மூன்றில் ஒன்று 'குறை ஓட்டம்' என்று குறிப்பிட நடுவர் ஆணை இடுவார்.

அவர்கள் இருவரும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் எடுக்க முயற்சி செய்கிற பொழுது, ஒன்றுக்கு மேற்பட்ட 'குறை ஓட்டங்கள்' அதில் இடம் பெற்றிருந்தால், எடுத்திருக்கும் அந்த ஓட்டங்கள் எல்லாமே, இல்லை என்றே ஒதுக்கித் தள்ளப்படும். ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

94. இருவரும் வேண்டுமென்றே 'குறை ஓட்டம்' ஓடிக் கொண்டிருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?

இவர்கள் வேண்டுமென்றே குறை ஓட்டம் ஓடுவதைக் கண்டதும் நடுவர், பந்து ஆட்டத்தில் இல்லை (Dead Ball) அதாவது, ஆட்டம் தொடர-