பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பந்தானது, ஆட்ட நேரத்தில், மட்டையால் அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டைக் கடந்து போனாலும்; அல்லது, எல்லைக் கோட்டருகில் நிற்பவர் பந்தைப் பிடித்தவாறு வெளியே போய் விட்டாலும்; அது முறையாக எல்லையைக் கடந்தது என்று நடுவர் அபிப்ராயப்பட்டால், அது எல்லையைக் கடந்தது என்றே கணக்கிடப்படும்.

அதனால், பந்து எல்லைக் கோட்டை கடக்கும் வரை எடுத்திருக்கும் ஓட்டங்கள் தான் கணக்கில் கொள்ளப்படும். எல்லைக்கப்பால் பந்து போய் விடுவதற்குமுன் எடுக்கின்ற ஓட்டங்கள் நான்குக்கு மேல் இருந்தால், அவைகள் கணக்கில் கொள்ளப்படும்.

ஆனால், ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானமிழந்து ‘வீண் எறி’ (Over Throw) எறிந்து விடுவதின் மூலம் எல்லையைக் கடந்துவிடுகிற பந்துக்காக 4 ஓட்டங்களும், அதற்குமுன் எடுத்திருந்த ஓட்டங்களுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

அத்துடன், அந்தந்த மைதானத்தில் அதற்கு முன் கொடுக்கப்பட்டு பரவலாக நிலவிவரும் பழக்கத்திலிருந்து ஓட்டக் கணக்கு நிர்ணய முறைகளையே நடுவர் வழக்கமாகப் பின்பற்றி அளிப்பார்.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமானால், எல்லைக் கோட்டைப் பந்து தொட்டுவிட்டாலே, எல்லை கடந்தது என்றே கொள்ளப்படும். அத்துடன் பந்தைத் தடுத்தாடுபவர், கையிலிருக்கும் பந்துடன் எல்லைக் கோட்டைக் கடந்து விட்டாலும், அல்லது உடம்பின் ஒரு பகுதியால் கோட்டைத் தொட்டுவிட்டாலும் பந்து எல்லை கடந்தது என்றே கூறப்படும்.