பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

 பந்து எல்லைக் கோட்டுக்கு வெளியே உருண்டோடிவிட்டால், நான்கு ஓட்டங்கள் என்று குறிக்க-ஒரு கையை பக்கவாட்டில் வீசி அசைத் துக் காட்டியும்;




எல்லைக்கு அப்பால் போய் விழுகின்ற பந்தை, 6 ஓட்டங்கள் என்று கூற, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திக் காட்டியும் நடுவர் சைகைகள் செய்வார்.

102. வெற்றி தோல்வியை நடுவர்கள் நிர்ணயிக்க விதிமுறைகள் எவ்வாறு உதவுகின்றன?

ஒரு போட்டி ஆட்டம், ‘முறை ஆட்டங்கள்’ (Innings), அல்லது நாள் கணக்கு அல்லது பந்தெறித் தவணைக் கணக்கு என்றவாறு முன் கூட்டியே முடிவு செய்வதற்கேற்றவாறு ஆடி முடிக்கப்பெறும்.