பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

ஒருநாள் போட்டியில், ஒரே ஒரு ‘முறை ஆட்டம்’ என்றால், அதில் பெற்ற ‘ஓட்டங்கள்’ இரு குழுவினருக்கும் சம எண்ணிக்கையில் இருந்தால், அது சமநிலை (Tie)யாகக் கொள்ளப்படும். அதாவது 2வது முறை ஆட்டம் ஆடப்படாத நிலையினில் இருந்தால் தான்.

104 போட்டி ஆட்டம் முடிந்தபிறகு, எந்த எதிர்க் குழுவையும் தொடர்ந்து ஆடுமாறு வற்புறுத்தலாமா?

யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. போட்டி ஆட்டம் முடிந்துவிட்டால், அதோடு ஆடுவதும் முடிந்தது என்றே கொள்ளவேண்டும்.

ஆட்ட நேரம் எவ்வளவ என்று முன்னே குறிப்பிட்டிருக்கும் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடுவதற்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது, என்று நடுவர் கருதினால் ஒரு நாள் போட்டி ஆட்டமானது, ஒரு ‘முறை ஆட்டம்’ முடிந்தால், முடிந்துவிட்டதாக, அதாவது முடிவு தெரிந்துவிட்டதாகக் கருதப்பட மாட்டாது.

105. முடிவு நிலை அறிவிப்பு (Declaration) என்பது என்ன? அதை விளக்கமாகக் கூறு?

பந்தடித்தாடுகின்ற குழுவின் தலைவர் (Batting side Captain) தங்களது பந்தடித்தாடிய நிலையில் தங்களுக்கு வெற்றிக்குச் சாதகமான நிலை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும்போது, ‘பந்தடித்தாடும் உரிமையை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்’ என்று எதிர்குழுத் தலைவருக்கு விடும் அறிவிப்பைத்தான், ‘முடிவு நிலை அறிவிப்பு’ என்று கூறுகின்றார்கள்.

கிரிக் - 5