பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


2 நாட்கள் நடக்கின்ற ஒரு போட்டி ஆட்டத்தில் 100 ஓட்டங்கள் அதிகமாக ஒரு குழு எடுத்திருந்தால்;

1 நாள் போட்டி ஆட்டம் என்றால், 75 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால்;

எதிர்க் குழுவை அழைத்து, தொடர்ந்தாடச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்ற உரிமை அக்குழுவிற்கு உண்டு.

தேவையானால், அக்குழுத் தலைவன் தனது இரண்டாம் ஆட்ட முறையைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

108. அடுத்த 'முறை ஆட்டம்' தொடங்குவதற்குரிய இடைவேளை நேரம் எவ்வளவு?

இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த ஆட்டம் தொடங்குவதற்குரிய இடைவேளை நேரமாக 10 நிமிடங்கள் உண்டு.

அதற்குள்ளே நேரம் பார்த்துக் கொண்டு, 7 நிமிடங்களுக்குள்ளே பந்தாடும் தரைப்பகுதியை (Pitch) உருட்டிப் பக்குவப்படுத்தி வைக்க நடுவர்கள் அனுமதிக்கலாம்.

109. 'விளையாடத் தொடங்குங்கள்' (Play) என்று நடுவர் கூறுகிறபொழுது, ஒரு குழு ஆட மறுக்கிறது என்றால் நடுவர் என்ன செய்வார்?

ஒரு குழு ஆட மறுக்கிறது என்றதும், அக்குழு ஆட்டத்தை இழந்தது. அதாவது அந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்று கூற நடுவருக்குப் பூரண அதிகாரமுண்டு.