பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

யிருக்கும் போது, படிக்கும் நேரத்தில், பேசும் சமயத்தில் சற்று கஷ்டமாக இருக்கும். இதைப் பற்றி குதர்க்கமாகப் பேசுவோரும் இருக்கத்தான் இருப்பார்கள்.

தமிழிலக்கியத்திற்கு இந்த ஆட்டம் புதிய விருந்தாகும். அந்த விருந்துக்குப் படைக்கப்பெற்ற சொற்கள் மருந்துபோலத் தோன்றினாலும், மருந்து விருந்தினருக்குப் பயன்படுமே அல்லது, பயப்படுத்தாது.

அந்த நல்ல நினைவோடு, நலமார்ந்த நோக்கத்தோடுதான் இந்நூலை உங்கள் கையில் படைக்கிறேன். கிரிக்கெட்டுக்கு இது புதிய முயற்சி.

முயற்சி வெல்ல, உங்கள் துணையை நாடுகிறேன். கலைச் சொற்கள் பற்றிய நல்ல சொற்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அன்பு கூர்ந்து எனக்குக் கூறுங்கள். நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்நூல் மேலும் முழுமைபெற அவை உதவும்.

எனக்கு உற்ற துணையாக இருந்து உற்சாகம் ஊட்டி வரும் எனது ஆசிரியர் டாக்டர் ராப்சன் அவர்களுக்கும், நண்பர் திரு. D. நாக சங்கரராவ் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.

அழகுற அச்சிட்டுத் தந்த திரு M. S. மணி, ஆக்க வேலைகள் அனைத்தையும் சிறப்புற செய்துவரும் திரு. R. சாக்ரடீஸ் அனைவரும் என் அன்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

விளையாட்டுத் துறையில் இந்நூல் 29வது நூலாகும். தொடர்ந்து எனது நூல்களுக்குப் பேராதரவு காட்டிவரும் தமிழ்கூறும் நல்லுலகத்தார் அனைவருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் கூறி, இரண்டாவது பதிப்பாக வரும் இந்நூலையும் ஆதரித்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஞானமலர் இல்லம்
தி. நகர், சென்னை -17
எஸ். நவராஜ் செல்லையா