பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


அவ்வாறு தீர்மானித்து, முடிவெடுத்துக் கூறுவதற்கு முன்னர் அவர் பலமுறை, சந்தர்ப்பங்களை அனுசரித்து ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.

இரு குழுவினருக்கும் தெளிவாகக் கேட்டுப் புரிந்து கொள்ளும் வண்ணம், ஆட்டத்தைத் தொடங்கி, 'விளையாடுங்கள்' என்று தாங்கள் கூறியதை நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முறையீடு ஏதேனும் அவர்கள் நிகழ்த்தியிருக்கலாம் (Appeal) என்பதை உணர்ந்து கொள்வதுடன், அவர்களால் ஆட இயலாது அல்லது தொடர்ந்து ஆட முடியாது என்பதில், நடுவர்கள் திருப்தியடையும் வண்ணம் அறிந்து கொண்டே பிறகே, அந்த முடிவுக்கு வரவேண்டும்.

110. 'விளையாடுங்கள்' (Play) என்று எந்த நடுவர் முதலில் ஆணையிட்டு, ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்?

முதலில் பந்தெறிந்து தொடங்கவிருக்கும் பந்தெறியாளர் பக்கம் (End) நிற்கின்ற நடுவர் தான் முதலில் ஆணையிட, ஆட்டம் தொடங்கும்.

111. ஆடுதற்குரிய ஆட்ட நேரம் முடிந்து விட்டது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்றவுடன் 'நேரம் முடிந்து விட்டது' (Time) என்று நடுவர் இடறிக்கொண்டே, இரண்டு விக்கெட்டுகளிலும் உள்ள 'இணைப்பான்களை' எடுத்துவிடவேண்டும். அப்பொழுது, ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.