பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


112. ஆட்டத்தில் இணைப்பான்கள் (Bails) எவ்வெப்போது நடுவர்களால் எடுக்கப்படுகின்றன (Removed)?

ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி வருகின்ற இடைவேளை நேரத்தின்போதும், அந்த ஒவ்வொரு நாள் நடந்திருக்கும் அத்த முழுநாள் ஆட்டத்தின் முடிவு நேரத்தின் போதும், மற்றும் அந்தப் போட்டி ஆட்ட முடிவின் போதும் இணைப்பான்கள் விக்கெட்டுகளில் இருந்து எடுக்கப்படுகின்றன.

113. 'ஆட்ட நேரம் முடிந்துவிட்டது' (Time) என்பதை எவ்வெப்போது நடுவர்கள் கூறலாம்?

எந்த ஆட்ட நேரமாயிருந்தாலும் கடைசி பந்தெறி தவணை (Over) முடிவுறுகிற பொழுது, ஆட்டக்காரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறுகின்ற தருணத்தில், 'ஆட்ட நேரம் முடிந்து விட்டது' என்று கூறலாம்.

போட்டி ஆட்டத்தின் கடைசி பந்தெறி தவணை தான் இறுதியானது என்பதால், அதற்குப் பிறகு ஆட்டம் தொடங்குவதற்குரிய வாய்ப்பு இல்லை என்பதால், அந்தப் போட்டி ஆட்டம் ஒரு முடிவு நிலைக்கு வந்ததாகவே எண்ணிக்கொள்ளலாம்.

114. ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்பதற்குரிய சூழ்நிலையில், நடுவர்கள் எங்கெங்கே நிற்க வேண்டும்?

இடைவேளை நேரத்திற்கு அல்லது ஆட்ட முடிவு நேரத்திற்கு முன்பாக உள்ள கடைசி பந்தெறி தவணையைத் தொடங்கி ஆடுகின்ற