பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


அவ்வாறு எந்த முடிவும் தெரியாது போனால், தொடரவேண்டிய சூழ்நிலை இருந்தால், குறைந்தது ஒரு பந்தெறி தவணைக்கு 6 எறி என்றால், 20 தடவையும்; ஒரு பந்தெறி தவணைக்கு 8 எறி என்றால் 15 தடவையும் எறியப்பட்டு ஆட்டம் நடந்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

118. மழை, மங்கிய வெளிச்சம், மற்றும் இடைவேளையின் போது கால தாமதம் ஏற்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டால், மீண்டும் ஆட்டத்தைத் எப்படித் தொடர்வது?

அப்பொழுது வீணாக ஆடாமல் கழிந்துபோன நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு, இத்தனை பந்தெறி தவணைகள் (Overs) எறியப்பட வேண்டும் என்பதையும் கணக்கிட்டுக் கொண்டு, அதற்கேற்ப 'பந்தெறி தவணைகள்' எறிந்து விளையாடும் நேரத்தைக் கீழ்க்காணும் முறைகளில் நிர்ணயித்துக்கொண்டு, ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

ஒரு பந்தெறி தவணைக்கு 6 எறிகள் என்றால் அதை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு பந்தெறி தவணை என்றும், 8 எறிகள் என்றால் ஒவ்வொரு பந்தெறிதவணைக்கும் 4 நிமிடங்கள் என்றும், இழந்த நேரத்திற்கேற்ற வகையில் பகுத்துக் கொண்டு ஆட்டத்தை நடத்தலாம் என்கிறது விதி.

119. போட்டி ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரத்தின் போது (Last Hour) ஓரு புதிய முறை ஆட்டம் (Inning) தொடங்கி ஆட வேண்டிய சூழ்நிலை எழுந்தால் என்ன செய்ய வேண்டும்? அவ்வாறு புதிய 'முறை ஆட்டம்' தொடங்கப்படுமேயானால், குறைந்தபட்சம் எவ்வளவு 'பந்தெறி தவணைகள்' (Overs) எறியட்பட வேண்டும்