பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


என்று கணக்கிட்டுக் கொண்டு, அவ்வாறு எறியப்படும் ஒவ்வொரு பந்தெறி தவணையும் 3 நிமிடங்களுக்கு ஒன்று என்றும் (8 எறிகள் என்றால் 4 நிமிடங்களுக்கு ஒன்று என) ஆட்டத்தின் மீதி நேரத்தைப் பகுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு பகுத்துக்கொண்டும் கணக்கிட்டுக் கொண்டும் ஆடமுனைகின்ற நேரத்தில், ஆட்ட நேரத்தின் அளவை முன்னரே குறித்துக் கொண்டது போன்றிருக்கும் அந்த நேரத்திற்குள் குறைந்த அளவே 'பந்தெறி தவணைகள்' எறியப்பட்டிருந்தன என்றால், வெற்றி தோல்வி தெரியாத நேரத்தில், அந்தப் போட்டி ஆட்டம் ஆட்ட முடிவிற்குரிய கால நேரம் குறித்திருந்ததற்கேற்ப தொடர்ந்து ஆடித்தான் ஆகவேண்டும்.

120. ஆட்ட நேரம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது என்றால், ஆட்டத்தை நிறுத்தி முடித்துவிடலாமா? குறிப்பிட்ட கால அளவு இன்னும் வரவில்லையென்றால், தொடர்ந்து அடுத்த 'பந்தெறி தவணை'யை ஆரம்பித்துவிட வேண்டும். ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழக்கிறார் (Out) அல்லது ஆட இயலாமையால் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார் (Retire) என்கிற நிலைமை உருவானாலும் ஆகாவிட்டாலும், ஆட்டக்காரர் இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றன என்கிற தருணம்வரை பந்தெறிதவணையை எறிந்து முடித்துத்தான் ஆகவேண்டும்.

போட்டி ஆட்டத்தின் கடைசி நாள் இறுதி ஆட்டமாக இருக்கும் பொழுது, இது போன்ற சூழ்-