பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


ஆகவே, தொடர்ந்து அச்சுறுத்தும் வண்ணம் பந்தெறிபவரை நோக்கி அவ்வாறு எறியக் கூடாது என்று நடுவர் முதலில் எச்சரிப்பார்.

அவரது எச்சரிக்கை பலனளிக்காது போனால், அதனை அக் குழுத் தலைவனுக்கும் அறிவித்து விட்டு அடுத்த நடுவருக்கும் என்ன நடந்தது என்பதையும் அறிவித்துவிடுவார்.

இந்த ஏற்பாடும் எந்தவிதப் பலனையும் தரவில்லையென்றால், பந்தெறிகின்றவர் பக்கம் நிற்கும் நடுவர், பந்தெறியாளர் பந்து எறிந்த உடனே, திரும்பத் திரும்ப அது 'நிலைப்பந்து' (Dead Ball) என்று குரல் கொடுத்துக் கூறிவிடுவார்.

பந்து ஆட்டத்தில் இல்லை என்று ஆட்டத்தை நிறுத்தி, பந்தெறியாளரது குழுத் தலைவனை அழைத்து, பந்தெறியும் வாய்ப்பிலிருந்து அவரை நீக்கிவிடுமாறு ஆணையிட வேண்டும். அவ்வாறே, அக்குழுத் தலைவன் அவரை மாற்றிவிடவேண்டும்.

இந்த நிகழ்ச்சி எதிர்க்குழு தலைவரிடம் நடுவரால் கூறப்பட வேண்டும். அத்துடன், தவறான ஆட்டத்திற்காகத் தண்டிக்கப்பட்ட அந்த ஆட்டக்காரர், அந்த 'முறை ஆட்டம்' முடியும் வரை பந்தெறியும் வாய்ப்பினைப்பெற அனுமதிக்கப்படமாட்டார்.

இவ்வாறு தான், ஒரு பந்தெறியும் ஆட்டக்காரர் வாய்ப்பை இழக்கிறார்.

125. ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Batsman) ஓய்வு பெறுகிறார் (Retires) என்றால் என்ன! பந்தடித்து ஆடிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆட்டக்காரர், தான் ஆடிக்கொண்டிருக்கும்போது