பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


சுகவீனத்தாலோ அல்லது மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களாலோ தொடர்ந்து, ஆட இயலாது மைதானத்தை விட்டு, வெளியே வந்து விடுகிறார் என்றால், அதுதான் ஆட இயலாது ஓய்வு பெறுகிறார் என்று குறிக்கப்படும்.

அவ்வாறு வெளியேறும் ஆட்டக்காரர்பற்றி, அவரது குறிப்பேட்டில், 'இவர் ஓய்வுபெற வந்தார் ஆட்டமிழக்கவில்லை' என்றே குறிக்கப்படும்.

126. அவர் மீண்டும் விளையாட விரும்பினால்?

அவர் மீண்டும் விளையாட விரும்பினால், உடனே உள்ளே வந்து ஆட முடியாது. எதிர்க் குழு தலைவனிடம் அனுமதிக் கேட்டு, அவர் அனுமதித்தபிறகே அதுவும் ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகிற பொழுதுதான், உள்ளே சென்று ஆட முடியும்.

127 நிலைபந்து என்றால் என்ன? (Dead Ball) ஒரு பந்து எப்பொழுது நிலைப்பந்தாகிறது?

நடுவரின் கருத்துக்கேற்ற முடிவின்படி, பந்து ஆடப்படாமல் இருந்து, ஆட்டம் தொடராமல் இருக்கும்போது, அது நிலைப்பந்தாக இருக்கிறது.

அவ்வாறு எந்தெந்த சமயத்தில், பந்து நிலைப்பந்தாக இருக்கிறது என்பதற்கு, விதிமுறைகள் பல சந்தர்ப்ப நிலைகளைத் தொகுத்துத் தந்திருக்கின்றன. அவைகள் பின்வருமாறு:

1. பந்தானது, விக்கெட் காப்பாளர் அல்லது பந்தெறியாளர் கைகளுக்குச் சென்றடைந்து விட்டது (Settled) என்கிறபொழுது