பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


131. கிரிக்கெட் ஆட்டத்தினைக் கண்காணிக்க எத்தனை நடுவர்கள் உண்டு? அவர்களுடைய கடமைகள் என்னென்ன?

இரண்டு நடுவர்கள் உண்டு.

ஆட்டத்தைத் தொடங்க, நாணயம் சுண்டிப் பார்ப்பதற்கு முன்னரே இரண்டு நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு விக்கெட் அருகே நின்று கொண்டு, விதிகளைத் துணையாகக் கொண்டு, பாரபட்சமற்ற முறையில் முடிவெடுத்து, ஆட்டத்தை நடத்திக் கொடுப்பார்கள்.

ஒரு நடுவர் ஆட்ட நடுவில் காயமுற்று விட்டால், வேறு ஒரு நடுவரை மாற்றிக் கொள்ளலாம். மாற்று நடுவராக வருபவரை ஆட்டம் முழுவதும் இடப்புற நடுவராக மாற்றிக் கொள்ளலாம். மாற்று நடுவராக வருபவர் ஆட்டம் முழுவதும் இடப்புற நடுவராக (Square leg) த்தான் பணியாற்றுவார்.

132. இரண்டு நடுவர்களின் பணிகள் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கின்றன?

பந்தெறிபவர் விக்கெட் பக்கம் நிற்கின்ற நடுவர். அடித்தாடும் ஆட்டக்காரரின் இடப்புறத்திலே (Square leg) நிற்கின்ற நடுவர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கென்று ஒரு சில பணிகளைப் பிரித்துக் கொண்டிருந்தாலும், முக்கியமான சமயங்களில் இருவரும் கலந்தாலோசித்த பிறகே, ஒரு முடிந்த முடிவுக்கு வருவார்கள்.

கிரிக்-6