பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


1. நடுவர் தரும் குறிப்புரையை அல்லது அறிவுரையைப் பின் பற்றாமல் அலட்சியம் செய்தல்.

2. நடுவர் எடுக்கும் முடிவுகள் பற்றி குறை சொல்லுதல்.

3. அவரது நடவடிக்கை பற்றி குழுத் தலைவனிடம் கூறிய பிறகும், தொடர்ந்து பிடிவாதமாக அதே முறையில் நடந்து கொள்ளுதல்.

4. பந்தினை நன்றாகப் பிடித்துக் கொண்டு (Hold) பந்தெறிய வேண்டும் என்பதற்காக, பந்தின் மேலுறைத் தையலைப் (Seam) பிரித்து நீக்கிவிடுதல்.

5. பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தை அடிக்கின்ற நேரம் பார்த்து தடுத்தாடும் குழுவினர் சத்தம் போட்டோ அல்லது வேறுவிதமான முறையிலோ குறுக்கிட்டுக் கெடுக்கும் வகையில் முயற்சித்தல்.

6. தங்கள் பந்தெறியாளர்களுக்குப் பயன்படும் வகையில், பந்தாடும் தரைப்பகுதியைப் (pitch) மேடுபள்ளமாகத் தோண்டி வைத்தல்.

7. வேண்டுமென்றே பந்தடித்தாடும் ஆட்டக்காரர் அருகில் பந்தைக் குத்தி உயர்த்துவது போல் (short pitched ball) பந்தெறிதல்.

மேற்கூறிய செயல்கள் எல்லாம் விதியை மீறி ஆடுகின்ற தவறான ஆட்டமாகும்.

136. ஒரு சில பந்தெறியாளர்கள் மேற்கொள்கிற தவறான வழிகள் யாவை?