பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


பந்தை நன்றாக எறிய வசதிப்படும் வகையில் பந்தின் மேலுறைத் தையலை நீக்கிவிடுவார்கள்.

இதைக் கண்டுபிடிக்கும் நடுவர்கள், உடனே, அந்தப் பந்தை மாற்றிவிட்டு, முன்னிருந்த பந்து தேய்ந்திருந்த தன்மையைப் போலவே வேறொரு பந்தை மாற்றி, ஆட்டத்திலிடச் செய்ய வேண்டும்.

இந்த தவறான ஆட்டத்தை, சம்மந்தப்பட்டக் குழுத்தலைவருக்கும் அவர் உடனே அறிவித்து விட வேண்டும், ஒரு சிலர் பிசின், மெழுகு போன்ற பசைப் பொருட்களையும் பயன்படுத்துவார்கள். அது மிகவும் தவறான ஆட்டமாகும்.

137. பந்து நனைந்து போயிருந்தால் எப்படி மீண்டும் பயன்படுத்துவது?

பந்து நனைந்து போயிருந்தால் கைத்துண்டால் துடைக்கலாம். அல்லது மரத்தூளின் (Saw Dust) மூலமாக ஈழத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

138. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆட்டக்காரர் மைதானம் விட்டு வெளியே போய் வரலாமா?

அது அந்த சூழ்நிலையைப் பொறுத்தது. ஆனால் எந்த ஆட்டக்காரரும் உடலை தேய்த்து விட்டுக் கொள்வதற்காகவோ (Rubdown) அல்லது குளித்துவிட்டு பெருவதற்காகவோ, ஆடுகளத்தை விட்டு வெளியே போகக் கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.

139. விளையாட இருக்கின்ற மைதானமானது ஆடுதற்கேற்றது என்று எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது?