பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


மைதானத்தின் ஆடுதற்கேற்ற தரமான தன்மை பற்றி, ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே மைதான அமைப்பு, கால நிலை, மற்றும் வெளிச்சம் இவைகளைப்பற்றி ஆராய்ந்து, இருவரும் கருத்தொருமித்து ஒரு முடிவினை எடுத்து விடுவதால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

140. ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, விளையாட்டு மைதானம் பற்றிய சிக்கல் எழுந்தால் என்ன செய்வது?

ஆடிக்கொண்டிருக்கின்ற பந்தடித்தாடுகின்ற இருவருக்கு மட்டுமே, ஆடுகள மைதானத்தின் சூழ்நிலை (Fitness) தெரியும். அவர்கள் தங்களது குழுத்தலைவன் மூலமாக, தங்களது அபிப்பிராயத்தைத் தெளிவுபடுத்தி விடுவார்கள்.

பிறகு, இரு குழுத் தலைவர்களும் முன்னர் கூறிய இயற்கை நிலை, ஒளி நிலை, மைதான நிலை முதலியவற்றைக் குறித்து ஆராய்வார்கள்.

இருவரும் ஏகோபித்தவாறு ஒரு முடிவுக்கு வந்தால், அதன் வழியே ஆட்டம் தொடரும். அல்லது முடிவின் வழி போகும்.

இருவரின் கருத்தும் மாறுபட்டு ஒரு முடிவுக்கு வராது போனால், நடுவர்கள் இருவரும், முடிவெடுக்கக் கூடியவர்களாகிவிடுகின்றார்கள்.

141. மைதானம் விளையாடுவதற்கேற்றதல்ல என்பது எந்த அடிப்படையில் கூறப்படுகிறது?

மைதானத்திலே தண்ணீர் தேரீ கியிருந் தாலும், அது அதிக ஈரத்தன்மை (wet)உடைய-