பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


விளையாட்டுத் துறை பற்றிய கருத்துக்களை வானொலி, டெலிவிஷன் மற்றும் வார, மாதப் பத்திரிகைகளில் கட்டுரைகள், சொல்லோவியங்கள், கவிதைகள் எழுதி, தான் மேற்கொண்டிருக்கும் பணியை மேலும் சிறப்புறத் தொடர்ந்து வருகிறார்.

விளையாட்டுப் பந்தயங்களில் பயிற்சி பெறுபவராக, பயிற்சி தருபவராக, விளையாட்டுப் பந்தயங்களை நடத்துபவராக மற்றும் பார்வையாளராக, இருந்து தான் பெற்றிருக்கும் அனுபவங்களின் சாரமாகவே, ஆசிரியரது நூல்கள் அமைந்திருக்கின்றன.

ஆசிரியரின் அரிய உழைப்பையும் நல்ல தொண்டினையும் அதே நேரத்தில் எங்கள் முயற்சியையும் பாராட்டி எங்கள் பதிப்பக நூல்களை வாங்கி ஆதரித்து, மேலும் எங்கள் பணியினைத் தொடர்ந்திட ஊக்கம் அளித்துவரும் அன்பர்கள், அறிஞர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதிப்பகத்தார்