பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


வீழ்த்திக் கொள்ளுதல் (Hit wicket); குறிக்கம்புகள் வீழ்த்தப்படுதல் (Stumped) மற்றும் ஓட்டத்திற்கிடையில் ஆட்டமிழத்தல், (Run out) போன்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அவர் முடிவெடுக்க இயலாத நிலையிலிருந்தால், அவர் அடுத்த நடுவரிடம் முறையிட, பிறகு அவர் எடுக்கின்ற முடிவே முடிவானதாக இருக்கும்.

147. தடுத்தாடும் குழுவினர் (Fieediag sidt) தங்கள் முறையீட்டை எவ்வாறு தெரிவிக்கலாம்?

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, எல்லோரும் அல்லது ஒருவர் என்றாலும் சரி, அது என்ன? (how is that) என்று குரலெழுப்பிக் கேட்கலாம்.

148. அதற்கு நடுவரின் பதில் எப்படி இருக்கும்?

அவர்கள் அவ்வாறு முறையிடும் போது, அதனைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, விதிகளுக்குரிய முறையில் அந்தக் குறிப்பிடும் ஆட்டக்காரர் நடந்தாரா அல்லது ஆட்டமிழந்தாரா என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

அவர் தவறி நடக்கவில்லை என்று இரு நடுவர்களும் கூறி, அவர் தொடர்ந்து ஆடலாம் (Notcut) என்று கூறிவிட்டால், பதில் சொல்ல வேண்டி பகுதியில் நிற்கும் நடுவர், உரிய நேரத்திற்குள் வருகின்ற அந்த முறையீட்டுக்குப் பதில் சொல்லி ஆகவேன்டும்.

149. ஒரு நடுவர், தான் கூறிய முடிவை உடனே மாற்றிக் கொள்ளலாமா?

தனது மாற்றிக் கொள்ளும் முடிவை உடனே செய்தாரானால் (Promptly) முன்னர் கூறிய மூடிவை மாற்றிக்கொள்ளலாம்.