பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


தான் ஒரு முடிவினைத் தரவில்லை என்பதற்காக, தான் தரவேண்டும் என்ற முடிவினைத் தருவதற்காக, அடுத்த நடுவரிடம் ஒரு நடுவர் முறையிடவும் கூடாது.

உரிய முறையில், இரு நடுவர்களும் கலந்தாலோசித்த பிறகு, ஏதேனும் முடிவெடுக்கும் நிலையில் ஐயப்பாடு வந்தால், அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, பந்தடித்தாடும் ஆட்டக்காரருக்கு சாதகமாகத் தான் இருக்க வேண்டும், வேறுமாதிரி அமைந்துவிடக் கூடாது.

152. ஓரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர், தான் ஆட்டமிழந்துவிட்டோம் என்று தவறாக நிணைத்துக்கொண்டு (ஆட்டமிழக்காதபோது) மைதானத்தைவிட்டு வெளியேறுகிறார் என்றால், அதற்குரிய வழிமுறை என்ன? அவர் ஆட்டமிழக்காத போது, தவறாக நினைத்துக் கொண்டு வெளியேறுகிறார், அது சரியல்லாத செயல் என்று நடுவர் எண்ணி. அம் முடிவின் மூலம் தான் திருப்தியடைந்தால், நடுவர் குறுக்கிட்டு, அவரை அழைத்து, மீண்டும் ஆடச் செய்யலாம்.

153. ஒரு போட்டி ஆட்டத்திற்கு எத்தனை குறிப்பாளர்கள் (Scorer)

இரண்டு பேர் உண்டு.

154. குறிப்பாளர்களின் கடமைகள் யாவை?

அவ்வப்போது நடுவர் காட்டுகின்ற சைகைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தாங்கள் ஏற்றுக்கொண்டதைத் தெரிவிக்கும் வகையில் சைகை மூலம் பதில் கூறிவிட வேண்டும்.