பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமாமுனிவர்

3


எவரும் அறிந்திலர். [1]'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்' என்று கூறுகின்றார் கம்பர்.

தேம்பாவணியில் முனிவர் இந் நயத்தை வடித்தெடுத்து வைத்துள்ளார். இளம் பாலனாகிய தாவீது கொடிய கோலியாத்து என்பவனைக் கொன்ற செய்தி கிருஸ்தவ ஆகமங்களிற் கூறப்பட்டுள்ளது. கோலியாத்து என்பவன் தேக வலிமை வாய்ந்தவன்; ஆனால் தெய்வ நிந்தனை செய்தவன். அவனது செருக்கையும் சிறுமையையும் அறுத்து ஒழிக்கக் கருதினான் தாவீது. ஆண்டவன் அருளைத் துணைக்கொண்டு, கவணும் கல்லும் கையில் எடுத்துப் பகைவனை நோக்கி நடந்தான். குன்று போல நின்ற கோலியாத்து, பகைத்துப் போர் செய்யத் துணிந்து வந்த பாலனை உருத்து நோக்கினான் ; கோடையிடி போல் முழங்கினான்; "அடா, மடையா மதயானையின் முன்னே சிறு நாயின் வேகம் செல்லுமா ? என்று ஏளனம் பேசினன். அப்பொழுது அக் கொடியவனது நெற்றியில் திண் என்று ஒரு கல்வத்து அடித்தது. திடீரென்று அவன் மண் மேல் விழுந்தான். அக்கல்லை விட்டெரிந்தவன் தாவீதனே என்று எல்லோ எல்லோரும் அறிந்தனர். அவன் எப்போது கல்லைக் கவணில் ஏற்றானான்? எப்படிச் சுழற்றினுன் ? எவ்வாறு


  1. ”தடுத்திமை யாமல் இருந்தவர் தாளின்
    மடுத்ததும் நாண் துதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
    எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”

    என்பது கம்பர் கவி.