பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வீரமாமுனிவர்


வீசினான் ? இவற்றை எல்லாம் அங்கு நிறைந்து நின்றவருள் எவரும் அறிந்திலர் ; எல்லோரும் கல்லடித்த ஓசையைக் கேட்டார் ; வல்லுருவம் மண்ணிடை வீழக் கண்டார் என்று வீரமாமுனிவர் பாடியுள்ளார்.[1]

முனவரது கவித்திறனைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். அவர் விரைவாகக் கவி சொல்லும்போது நான்கு மாணவர் வரிசையாக அமர்ந்து ஒவ்வொரு வரிசையை ஒவ்வொருவர் ஏட்டில் எழுதுவாரென்றும், ஐந்தாவது மாணவன் அந்நான்கு அடிகளையும் சேர்த்தெழுதிப் பாட்டு வடிவத்தில் காட்டுவானென்றும் ஒரு கதை வழ்ங்குகின்றது. இன்னும் தேம்பாவணிக் காவியத்தை முனிவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய பொழுது அதன் நயங்களை உணர்ந்த சங்கப் புலவர்கள் அவருக்கு வீரமா முனிவர் என்னும் பட்டம் அளித்தார்கள் என்று மற்ருெரு கதை கூறும். இத்தகைய கதைகளின் உதவியில்லாமலே தேம்பாவணிக் கவிதையின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளக்கூடும்.

கிருஸ்து மத சேவையில் சிறந்த ஆர்வம் வாய்ந்த வீரமாமுனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்ற சிற்றைரில் சிறந்த கோயில் ஒன்று கட்டினர் ; தேவ மாதா-


  1. ”கல்லை ஏற்றலும் கவணினைச் சுழற்றலும் அக்கல்
    ஒல்லை ஒட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன. சிலேதுதல் பாய்தலும் அன்னான் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்.”

    என்பது முனிவர் பாட்டு.