பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமாமுனிவர்

5


வாகிய மரியம்மையின் திருவுருவத்தை அக்கோயிலில் நிறுவினர்; அடியாரைக் காத்தருளும் மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார் ; அம்மாதாவின் அருட்காவலில் அமைந்த இடத்திற்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்வூரின் பெருமையை அன்பர்கள் அறிந்து இன்புறும் வண்ணம் "திருக்காவலூர்க் கலம்பகம்“ என்னும் பிரபந்தம் பாடினார். அடைக்கல மாதாவின் திருவடிகளில் வீரமாமுனிவர் அணிந்த கலம்பகப் பாமாலை சிறந்த தமிழ் மணம் கமழ்வதாகும்.

திருக்காவலூரில் வீரமாமுனிவருக்கு இருந்த காதல் திருவேங்கடத்தில் குலசேகர ஆழ்வார் கொண்டிருந்த காதலை ஒத்ததாகும்; அரசர் குலத்திற் பிறந்த குலசேகர ஆழ்வார் மண்ணரசையும் விண்ணரசையும் விரும்பவில்லை; திருமால் நின்றருளும் திருவேங்கடமலையில் ஒரு மரமாக நிற்கவும், படியாகக் கிடக்கவும், ஆறாகப் பாயவும் மீனகத் திரியவும் ஆசைப்படுகின்றார்[1] . இத்தகைய ஆசை வீரமாமுனிவரது பாட்டிலும் வெளிப்படுகின்றது. அடைக்கல மாதாவின் அருட்காவலில் அமைந்த திருக்காவலூர்ச் சோலையில் புல்லாக நிற்கவும், வண்டாகத் திரிந்து தேன் உண்டு தெள்ளிய கீதம் பாடவும் விரும்புகின்றர்


  1. ஆதை செல்வத் தரம்பையர்கள் தற்குழ
    வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
    தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

    –குலசேகர ஆழ்வார்