உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வீரமாமுனிவர்


முனிவர்[1]. எனவே, திருவேங்கடமலையில் கல்லாய்க் கிடக்க விரும்பும் குலசேகர ஆழ்வாரும் திருக்காவலூர்ச் சோலையில் புல்லாய்க் கிடக்க ஆசைப்படும் வீரமாமுனிவரும் தத்தம் சமய வழிபாட்டில் தலைசிறந்த அன்பு வாய்ந்தவர் என்பது இனிது விளங்கும்.

இத்தகைய கவஞராகிய வீரமா முனிவர் தமிழ் அகராதியின் தந்தையாகவும் விளங்குகிறார். தமிழ்ச் சொற்களை அகரம் முதலாகத் தொகுத்தும் வகுத்தும் பொருள் எழுதியவர் அவரே. அவர் காலத்துக்கு முன்பு தமிழ்ப் பதங்களின் பொருள் தெரிந்து கொள்வதற்குப் பல நிகண்டுகள் இருந்தன. திவாகரம் என்பது ஒரு நிகண்டு. அது திவாகர முனிவரால் செய்யப்பட்டது. பிங்கலம் என்பது மற்றொரு நிகண்டு. அவை இரண்டும் மிகப் பழமை வாய்ந்தன. பிற்காலத்தில் சூடாமணி என்னும் நிகண்டு பெயர் பெற்று விளங்கிற்று. அந்நிகண்டுகள் எல்லாம் செய்யுள் நடையிலே அமைந்திருந்தன ; மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்ற வகையிலே இயற்றப்பட்டிருந்தன. கவிபாடும் புலவர்களும்


  1. "தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும் அக்
    கமலத்தாள் தாங்கி லேனோ
    கோள் அணிந்த குழலணிதார் குடைவண்டாப்
    புகழ்பாடி மதுவுண் ணேனோ
    வாள் அணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம்
    ஈன்ற ஒரு மானாய் வந்தாள்
    கேள் அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்
    பசும்புல்லாய்க் கிடவேன் நானோ“

    –வீரமாமுனிவர்