வீரமாமுனிவர்
7
உரை காணும் அறிஞர்களும் அவற்றைக் கற்றுப் பயனடைந்தார்கள். ஆயினும் கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப் பதங்களே எளிதாக உணர்வதற்கு மேல் நாட்டு அகராதி முறையே சிறந்ததென்று வீரமாமுனிவர் கருதினர். பண்டை நிகண்டுகளில் அமைந்த பதங்களை வரிசைப்படுத்திச் சதுர் அகராதி என்னும் பெயரால் அரியதோர் நூலை அவர் வெளியிட்டார். அதுவே பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.
இன்னும் தமிழ் நூல்களுள் தலைசிறந்து விளங்கும் திருக்குறளை மேலே நாட்டார்க்கு முதன் முதற் காட்டியவர் வீரமாமுனிவரே என்பது பலர் கொள்கை. முப்பாலாக அமைந்த திருக்குறளின் அறத்துப்பாலேயும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார் முனிவர். அந்நூலே ஏனைய ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் வழங்குவதற்கு வழிகாட்டிற்று. ஜெர்மானிய மொழியில் திருக்குறளே முற்றும் மொழி பெயர்த்த கிரால் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லீசர், போப்பையர் முதலிய அறிஞர்க்கும் அது பெருந்து திணையாயிருந்தது.
இவ்வாறு பல துறைகளில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவர், தமிழ் வசன நடையையும் வளர்ப்பாராயினர். கிருஸ்து மத போதகம் செய்யும் உபதேசியார்களுக்காக அவர் ஒரு வசன நூல் எழுதினர்; அதற்கு வேதியர் ஒழுக்கம் என்று பெயரிட்டார். அந்நூலே வீரமா