பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. போப்பையர்


போப்பையர் என்று தமிழ் நாட்டார் போற்றும் அறிஞர் பத்தொன்பதாம் வயதில் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்ய வந்தார் ; அறுபதாண்டளவும் தமிழகத்தில் அரும்பணி ஆற்றினார் : பின்பு சீமைக்குச் சென்று ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிக்கும் ஆசிரியராக அமர்ந்து, இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டு செய்தார். சுருங்கச் சொல்லின், இவர் மேலை நாட்டார்க்குத் தமிழகத்தின் கலைச் செல்வத்தைக் காட்டினார் ; நீதியின் நீர்மையை உணர்த்தினார் ; ஞானச் செல்வத்தை வழங்கினார்; தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக் கொண்டார் என்னலாம்.[1]


இத்தகைய பெரியாரது தமிழ்த் தொண்டு நெல்லை நாட்டிலே தொடங்கிற்று. அந்நாட்டில் [2]சாயர்புரம் என்னும் ஊர் ஒன்று உண்டு. அது கிருஸ்தவ நாடார்கள் நிறைந்த சிற்றூர். அங்கே கிருஸ்து மத போதகராகச் சென்றார் போப்பையர்; அவ்வூரில் உள்ள சிறுவர்களின் அறிவை வளர்ப்


  1. Dr. Pope himself had truly said that Tamil Scholarship was the direct road to poverty. Notwithstanding this disadvantage, Dr. Pope had devoted almost sixty years of his life to the study of the Tamil. literature and to its critical examination.-Siddhanta Deepika Vo. VII p. 192.
  2. சாமுவேல் சாயர் என்னும் போர்ச்சுகீசியக் கிருஸ்தவரது பொருள் உதவியால் வாங்கப்பட்ட நிலத்தில் எழுந்த ஊர் சாயர்புரம் என்று பெயர் பெற்றது.