பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமாமுனிவர்

13


தோடர் பேசும் மொழியில் பாட்டும் இல்லை ; வசனமும் இல்லை. எருமை மாடு மேய்ப்பதே அவர்கள் தொழில். அன்னார் குடியிருக்கும் ஊருக்கு மந்து என்பது பெயர். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுச் சென்னை அரசாங்கத்தாரும் செல்வரும் சென்றடைகின்ற 'ஒத்தக்க மந்து' என்ற ஊரின் பெயரில் அச்சொல்லைக் காணலாம். [1]ஒத்தைக்கல் மந்து என்று தோடரால் இடப்பட்ட பெயரே ஒட்டக்க மண்டாயிற்று என்று சிலர் கருதுகின்றார்கள். நீலகிரித் தோடர் பேசும் மொழியைப் போப்பையர் ஆராய்ந்து அதன் இலக்கணத்தை எழுதியுள்ளார்.

தமிழ் மொழிக்கு ஐயர் செய்த தொண்டுகள் பலவாகும். தமிழில் அமைந்த அருமையான நீதி நூல்களை இவர் படிப் படியாகக் கற்றார். பள்ளிச் சிறுவர் முதலாகப் பரிபக்குவமடைந்த பெரியோர் ஈருக எல்லோருக்கும் பயன்படத்தக்க முறையில், தமிழ் மொழியில் நீதி நூல்கள் அமைந்திருக்கக் கண்டு மனம் மகிழ்ந்தார். ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் "அறச்செய விரும்பு“, "ஆறுவது சினம்“ என்று பாடல் ஓதுகிறார்கள். அறிவு வளர வளர தாலடியார், திருக்குறள் முதலியவற்றை நுணுகி நுணுகி, ஆராய்கின்றார்கள். நீதி நூல் வகையில் தலை சிறந்த பெருமை தமிழ் நாட்டில் நால்டியாருக்கும் திருக்குறளுக்கும் உண்டு. "ஆலும் வேலும்


  1. ஒத்தைக்கல் மந்து என்பது ஒற்றைக்கல் மன்று என்ற சொல்லின் சிதை வென்பர்.