பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி“ என்பது இந்நாட்டுப் பழமொழி. நாலு என்பது நான்கு அடிகளில் அமைந்த நாலடியார். இரண்டு என்பது ஈரடிகளில் அமைந்த திருக்குறள். இவ்விரண்டு நீதி நூல்களிலும் அடங்கிய அறிவுச் செல்வத்தை ஆராய்ந்தறிந்தார் போப்பையர்; அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

போப்பையர் காலத்திற்கு முன்னமே திருக்குறள் சில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. வீரமாமுனிவர், திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழியில் பெயர்த்திருந்தார். ஜெர்மன் மொழியில் கிரால் என்பவர் திருக்குறளை முற்றும் மொழி பெயர்த்திருந்தார். பிரஞ்சு மொழியில் ஏரியல் என்பவரால் திருக்குறளின் ஒரு பாகம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் அதனை மொழி பெயர்க்க முயன்றவர்கள் அரைகுறையாக விட்டுப் போயினர். எல்லீசர் என்னும் அறிஞர் பதின்மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளை மொழிபெயர்த்திருந்தார். துருவர் என்னும் ஆங்கிலப் பாதிரியார் அறுபத்து மூன்று அதிகாரங்களை மொழிபெயர்த்து விட்டு விட்டார். இந்த நிலையில் இருந்த திருக்குறளை முற்றும் ஆராய்ந்து, நன்றாக மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்ட பெருமை போப்பையருக்கே உரியதாகும்.

அந்நூலை மொழி பெயர்க்கும் பொழுது கிருஸ்து நாதர் அருளிய சில கருத்துக்களும், திருவள்ளுவர் கருத்துக்களும் ஒற்றுமையுடையனவாக