பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

போப்பையர்

தெடுக்கப்பட்டார்[1]. அப்பொழுது இந்திய நாட்டு மந்திரியாக இருந்த சர். ஜான் மார்லி என்பவர் தலைமையில் ஒரு பாராட்டுச் சபை கூடிற்று. போப்பையர் தமிழுக்குச் செய்துள்ள அரும்பெருஞ் சேவைகளைத் தலைவர் புகழ்ந்து பேசித் தங்கப் பதக்கத்தைப் புலமைப் பரிசாக அளித்தார். பலர் அறிஞர் ஐயரைப் பாராட்டி ஆசி கூறினாள்கள்.

அதற்கு அடுத்த ஆண்டில் போப்பையர். இவ்வுலகத்தை விட்டகன்றார். தமது கல்லறையில் "போப்பையர்—[2] ஒரு தமிழ் மாணவர் என்ற வாசகம் எழுதப்படல் வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். இவரது தமிழ் ஆர்வத்திற்கு இவ்விருப்பம் ஒன்றே போதிய சான்றாகுமன்றோ ? எந்நாட்டிற் பிறந்தாலும், எந்நாட்டில் இறந்தாலும் போப்பையரைப் போன்றவர்கள் சிறந்த தமிழரே. என்பதில் தடையும் உண்டோ?


  1. In commemoration of the Diamond Jubilee of Queen Victoria the Royal Asiatic Society established a Gol; Medal to be awarded every third year to some specially selected savant of repute by whose labours Oriental learning has been encouraged amongst English speaking people throughout the world. The time for this triennial award has once more come round and the choice has fallen on that eminent Tamil scholar, the Rev. G. U. Pope—The Times of India dated 20th April 1906.
  2. Whenever I die "A Student of Tamil wil be inscribed on my monument "-Dr. Pope's letter dated 20th October, 1900, to J. M. Nallasami Pillai–Editor of the Siddhanta Deepika.