பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கார்டுவெல் ஐயர்


இங்ஙனம் தம்மை ஏற்றுக்கொண்ட நெல்லை நாட்டிற்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்தினார் கால்டுவெல். திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரன் முறையாக முதன் முதல் எழுதியவர் அவரே. அதனைச் சென்னை அரசாங்கத்தார் அச்சிட்டு வெளிப்படுத்தினர்; ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையும் அளித்தனர்.

பாண்டி நாட்டின் பழம் பெருமையை அச்சரித்திர நூலிற் பரக்கக் காணலாம். முற்காலத்தில் பாண்டி நாட்டின் சிறந்த செல்வம் முத்துச் சலாபமே. அந்நாட்டைச் சேர்ந்த கடலில் நல்முத்து ஏராளமாக[1] விளைந்தது. பிற நாட்டார் தென்னுட்டு முத்தைப் பிரியமாக வாங்கி அணிந்து கொண்டார்கள். தமிழ் நாட்டுக் கவிகள் தென்னாட்டு முத்துச் செல்வத்தை வியந்து பாடி மகிழ்ந்தார்கள். இத்தகைய புகழ் வாய்ந்த முத்துச் சலாபம் திருநெல்வேலிக் கடற் கரையின் அருகே அமைந்திருந்தது. நெல்லை நாட்டை நீர் ஊட்டி வளர்க்கும் தாம்பிரபரணியாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கைத் துறைமுகம் விளங்கிற்று. முற்காலத்தில் கொற்கை உலகறிந்த பெருந் துறைமுக நகரமாய் இருந்தது. அத்துறையிலே மிகுதியாக முத்து


  1. "வேழம் உடைத்து மலைநாடு, மேதக்கச்
    சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து, தெண்ணீர் வயற்றொண்டை
    தன்னாடு சான்றோர் உடைத்து“

    என்று பாடினார் ஔவையார்.