பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கார்வுவெல் ஐயர்

27

வண்ணமே ஆசிய தேசத்து மொழிகளிலும் கோழி என்பது கோரியாயிற்று. தமிழ்நாட்டில் வான்கோழி என்னும் ஒரு வகைக் கோழி உண்டு. அதைக் குறித்துப் பாடியுள்ளார் ஒரு தமிழ்க் கவிஞர்.

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத்—தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற்போலுமே
கல்லாதவன் கற்ற கவி.”

என்பது மூதுரை யென்னும் தமிழ் நூலிற் கண்ட பாட்டு. அந் நூல் செய்தவர் ஔவையார் என்பர். கால்டுவெல் ஐயர் அதைப்பற்றி ஒன்று கூறுகின்றார். வான்கோழி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பதினாறாம் நூற்ருண்டில் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் அதற்கு டர்க்கி என்பது பெயர். வான்கோழியைப் பற்றிய குறிப்பு மூதுரையில் காணப்படுவதால் அந்நூல் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னே எழுதப்பட்டிருத்தல் இயலாது என்று அவர் கருதுகின்றார்.

இவ்வாறு சரித்திர ஆராய்ச்சியால் பல உண்மைகளே வெளிப்படுத்திய கால்டுவெல் ஐயர் தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளுக்குச் செய்த அருந்தொண்டு எந்நாளும் அழியாததாகும். நெடுங்காலமாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் என்னும், ஐந்து மொழிகளும் தென்னிந்தியாவில் வழங்கி வருகின்றன. ஆயினும் அவை ஐந்தும் ஒரு தனிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்றும், அவற்றுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆராய்ச்சி யுலகத்திற்குக் காட்டியவர் கால்டுவெல் ஐயரேயாவர். இன்று